Subscribe Us

வரலாற்றில் இன்று டிசெம்பர் 20

69 : நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.

1192 : சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்

1606 : வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்க கண்டத்தில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

1803 : பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

1844 : இலங்கையில் அடிமை முறைமையை ஒழிப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது.

1860 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலினா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

1915 : முதலாம் உலகப் போரில் கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பின.

1917 : சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறையான 'சேக்கா' அமைக்கப்பட்டது.

1942 : இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் கல்கத்தா நகரம் ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

1943 : பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.

1951 : அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவின்  ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

1952 : ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.

1955 : கார்டிஃப் நகரம் வேல்ஸின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1960 : வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

1971: பாகிஸ்தானின் 4 ஆவது ஜனாதிபதியாக ஸுல்பிகார் அலி பூட்டோ பதவியேற்றார்.

1973 : ஸ்பானியப் பிரதமர் 'லூயிஸ் கரேரோ பிளாங்கோ' மாட்ரிட் நகரில்
கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1984 : இங்கிலாந்தில் சுரங்க ரயில் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலென்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1987 : பிலிப்பைன்ஸின் பயணிகள் கப்பலான எம்.வி. டோனா பாஸ், பிலிப்பைன்ஸின் தப்லாஸ் நீரிணையில் வெக்டர் எனும் எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749 என அறிவிக்கப்பட்டது) பேர் உயிரிழந்தனர்

1988 : போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐ.நா சாசனம் வியன்னாவில் கைச்சாத்திடப்பட்டது.

1989 : பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

1995 : அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்

1999 :  மக்கவ் பிராந்தியத்தை மக்கள் சீனக் குடியரசிடம் போர்த்துக்கல் கையளித்தது

2007: பிரிட்டனில் இரண்டாம் எலிஸபெத் அரசி, மிக அதிக வயதில் பதவியிலிருந்த அந்நாட்ட அரசியானார் (அப்போது81 வருடங்கள் 7 மாதங்கள், 29 நாட்கள் வயது) அவருக்குமுன விக்டோரியா அரசி மிக அதிக வயதில் பதவியிலிருந்தவராக விளங்கினார்.

Post a Comment

0 Comments