இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர்
மைத்திரி பால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருடத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 54,000 க்கும்
அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளுக்கு அருகிலும் இவை
விற்கப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில்
மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சுகாதார அமைச்சு
தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்களின் உதவியையும் பெற்றுக்
கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.
அத தெரண


0 Comments