Subscribe Us

header ads

பெருந்தொகை கழிவுத் தேயிலைகளுடன் 17பேர் கைது

பெருந்தொகை கழிவுத் தேயிலைகளை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில்

தொம்பே - இந்தோலமுல்ல பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றிலேயே இந்த கழிவுத் தேயிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குணுபிட்டிய, மஹஓய, கோனவல, பேலியகொட, வத்தலை, மாத்தளை, களனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.

மேலும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,00,000 கிலோ கழிவுத் தேயிலையும், அவற்றை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, தொம்பே பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments