ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய ஒரு நாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல் வரிசையில் தொடர்ந்தும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான சங்ககார மற்றும் டில்ஷான் ஆகியோர் முறையே 4ஆம் 7ஆம் இடங்களில் நீடிக்கின்றனர்.
இந்த புதிய தரவரிசைப் பட்டியில் இன்று ஐ.சி.சியினால் வெளியிடப்பட்டுள்து.
இதன் படி ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான முதல் 10 வீரர்களில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஒரு இடம் சரிந்து 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணி வீரர் தவான் 9 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் 10 இடங்களுக்குள் வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒரு நாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர் தரவரிசையில் அஜ்மல் தொடர்ந்தும் முதல் இடத்தினைத் தக்க வைத்துக்கெண்டுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர் தரவரிசையில் அஜ்மல் தொடர்ந்தும் முதல் இடத்தினைத் தக்க வைத்துக்கெண்டுள்ளார்.


0 Comments