Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று டிசெம்பர் 04

1259 : பிரான்ஸின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நோர்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி  ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
    
1639 : ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
 
1791 : உலகின் முதலாவது ஞாயிறு இதழான 'தி ஒப்சேர்வரின்' முதலாவது இதழ் பிரிட்டனின் வெளிவந்தது.
 
1829 : ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் 'உடன்கட்டை ஏறல்' முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
1918 : முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் ஐரோப்பா சென்றமை இதுவே முதற் தடவையாகும்.
   
1943 : இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ 'ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்' ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
   
1945 : ஐநாவில் ஐக்கிய அமெரிக்கா  இணைவதற்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு செனட் சபை வாக்களித்தது.
   
1957 : ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
  
1958 : பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
 
1959 : ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ், சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
  
1967 : வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
  
 1971 : பங்களாதேஷ் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடியது.
   
 1971 : பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
    
1976 : இந்தோனேஷியாவின் ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
   
 1977 : மலேஷியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
    
1984 : குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
   
 1991 : டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூததில் விடுவிக்கப்பட்டார்.
    
1991 : ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
    
1992 : ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
    
2005 : ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Post a Comment

0 Comments