பிரபல தனியார் தொலைக்காட்சியின் 'ரியாலிட்டி ஷோ' மூலம் பெரோஸ் பாத்திமா
என்ற ஏழைப் பெண்மணிக்கு ரூ 1 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது பலரை
ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் பிரபல 'சோனி' தனியார் தொலைக்காட்சி, இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வைத்து நடத்தும் 'க்ரோர்பதி' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த பிரோஸ் பாத்திமாவுக்கு இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
இதுகுறித்து கூறிய பெரோஸ் பாத்திமா, "பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டேன். இளைய சகோதரியின் கல்லூரி படிப்புக்கான செலவையும் நானே பார்து வருகிறேன்.
இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை மரணமடைந்தார். தந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக வாங்கிய கடன் ரூ. 12 லட்சம் உள்ளது. அதனை இந்த பரிசுத் தொகையின் மூலம் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது." என்று தெரிவித்தார்.
மேலும் இப்பரிசுத் தொகையின் மூலம் மிகவும் பிந்தங்கிய கிராம விவசாய முன்னேற்றத்திற்காக, நவீன உபகரணங்களை வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments