Subscribe Us

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைத்த கண்காட்சியில் தீ. காட்சி கூடம் முற்றாக எரிந்தது நாசம்

(Mohamed Suhail)

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறன்  கண்காட்சி கூடத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் கண்காட்சி கூடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று நாள் கொண்ட ஆக்கத்திறன் கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று, அமைச்சர் சம்பிக்கவினால் கண்காட்சி கூடம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 15 நிமித்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இதனால் காட்சி கூடம் முற்றாக எரிந்துள்ளதுடன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மேலும் தெரிய வருகின்றது.

அதேவேளை மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளதுடன், இத்தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அறிய முடிகிறது.

Post a Comment

0 Comments