சிறுநீரக நோயாளர்களது நலன் தொடர்பில் இடம்பெறும் விசேட நிகழ்ச்சி ரீவி தெரண
"மனுசன் தெரண" வேலைத்திட்டம் இன்று (03) ஆரம்பமாகியுள்ளது.
பின்தங்கிய கிராமங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்காக நிதி திரட்டுவதற்கான நீண்ட பயணமாக இது அமையப்பெற்றுள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களிலும் உள்ள சிறுநீரக நோயாளர்கள் தொடர்பிலும்
அவர்களது உணவு முறை தொடர்பிலும் தெரண இதன்போது கவனம் செலுத்துகிறது.
சிறுநீரக நோயிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக "மனுசன் தெரண" நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ள முடியும்.
இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையான 9 மணித்தியாலங்கள் விசேட நேரடி ஒளிபரப்பு ரீவி தெரணவில் இடம்பெறுகிறது.
ரீவி தெரணவின் "மனுசன் தெரண" நேரடி நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள
விரும்புபவர்கள் 077-0701010 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு
கொள்ளுங்கள்.


0 Comments