தனக்கென உலகின் பல நாடுகளில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள மிஸ்டர் பீன் பாத்திரத்தின் நாயகன் ரோவன் அட்கின்சன்.
இன்று இவர் தற்கொலை செய்ததாக சில ஆங்கில இணையதளங்கள் காலை முதல் பரபரப்பாக செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
இதனால் அவர் வீட்டின் முன் பல மீடியாக்கள் குவித்தனர். அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் ரோவன் அட்கின்சன் அவர்கள் முன் உயிரோடு தோன்றினர்.
நீங்கள் இறந்து விட்டதாக சில இணையதங்களில் செய்திகள் வெளியானதே என அவரிடம் கேட்ட பொழுது, எனக்கு எதுவும் ஆகவில்லை தான் நலமாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர்.
இதில் கொடுமை என்னவென்றால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் பலர் இச்செய்தியை விசாரித்து பார்க்காமல் பகிர்ந்து இருந்தது தான்.
ஏற்கனவே இது போன்று இறந்து விட்டதாக நெல்சன் மண்டேலா உட்பட பலர் இவ்வாறக வதந்தி மூலம் சிக்கியவர்கள் ஆவார்கள்.


0 Comments