Subscribe Us

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் ஸ்கான் தொழில்நுட்பம்

மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை , ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஸ்கானிங் முறையின் மூலம் , தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தொழில்நுட்பம், இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஆபத்தான பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிரவைத்து, அதிகக் கூர்மையுள்ள ஸ்கான்களின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மாரடைப்பு ஏற்பட்ட 40 பேர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் , இந்த ஸ்கான், 37 நோயாளிகளின் இதயத்தில் , சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது .

இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ சஞ்சிகையான , லேன்செட்டில் வெளியிடப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments