பாசத்திற்கு
அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை
ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல்,
நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது,
முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர்
பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும்.
இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று
யோசிக்க வேண்டும்.
பொதுவாக மனிதனிடம் இருக்கும் குணங்களுள் ஒன்று தான்,
அலட்சியப்படுத்திவிட்டு எதிர்பார்ப்பது. இது ஒருவர் தம் மீது அன்பு
காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின்
அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது
தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இது பொதுவாக
அனைவரது வாழ்க்கையிலும் நிகழக்கூடியது தான்.
ஆண்கள் விலகிச் செல்லும் போது பெண்கள் பின்பற்ற வேண்டும். சரி, இது
போன்ற வேறு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சிப்
பாருங்கள். பின் ஆண்களின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரியும்.
பார்வையினால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம்.
உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு
வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம்
பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு
லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் கொஞ்சிக் கொண்டே பின்னால் வருவார்கள்.
இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில
நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு
வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஜிம்மில் சேர்வது, டான்ஸ்
பள்ளியில் சேர்வது, நண்பர்களுடன் வெளியூருக்கு பயணம் மேற்கொள்வது என்று
இருந்தால், அவர்களுக்கு உங்களது அருமை புரிய ஆரம்பித்து, அன்பு மழையை
பொழிந்து தள்ளுவார்கள்.
கனவுகளை நனவாக்கவும் அனைவருக்குமே எதிர்காலத்தில் நல்ல நிலையில்
இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். எனவே என்ன தான் காதலித்தாலும்,
குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேற
ஆரம்பித்தால், ஆண்களின் மனதில் நிச்சயம் ஒரு மதிப்பையும், அன்பையும்
பெறுவதோடு, அவர்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல
வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில்
தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை நீங்கள் அழைத்த
போது வராமல் அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை
உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும்
தெரிந்து கொள்வார்கள்.
எப்போதும் ஸ்மார்ட்டாக நடக்க வேண்டும். ஆண்களை கவர புத்திசாலித்தனம்
எப்போதும் உதவியாக இருக்கும். எனவே நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பதை
அவர்கள் முன்பு நிரூபித்து காட்டுங்கள். உதாரணமாக, அலுவலகத்தில்
அவர்களுக்கு உள்ள பிரச்சனையை கேட்டு, அதற்கான சரியான தீர்வை உடனே சொல்லிப்
பாருங்கள். பின் அவர்கள் எதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, எப்போதும்
அவர்களுடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று உங்களின் அன்பைபும் நாடுவார்கள்.


0 Comments