இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நியூ ஸிலாந்து அணியின் தலைவராக கய்ல் மில்ஸ்நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணியின் தலைவராக முன்னர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் பங்களாதேஷுக்கு எதிரான தொடரின்போது பெருவிரலில் காய மடைந்ததால் கேன் வில்லியம்ஸன் நாடு திரும்பியுள்ளார்.இலங்கையுடனான கிரிக்கட் தொடரைக் கைவிடுமாறு வழமையான அணித் தலைவர் பிறென்டன் மெக்கலமும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ரொஸ் டெய்லரும் கோரப்பட்டதாலேயே கேன் வில்லியம்சனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் பொருட்டே மெக்கலமும் டெய்லரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளைக் கைவிடுமாறு கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வில்லிம்சனும் காயமடைந்துள்ளதால் நியூ ஸிலாந்து அணிக்கு முதல் தடவையாக தலைமை வகிக்கும் வாய்ப்பு மில்ஸுக்கு கிடைத்துள்ளது. 154 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கய்ல் மில்ஸ் 223 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார். டனியல் வெட்டோரி கைப்பற்றியுள்ள 284 விக்கட்களுக்கு அடுத்ததாக நியூஸிலாந்து சார்பாக அதிக விக்கெட்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றியோர் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நியூ ஸிலாந்து கிரிக்கெட் குழாமில் இடம்பெறுவோர்: கய்ல் மில்ஸ் (அணித் தலைவர்), கோரி அண்டர்சன், அன்டன் டேவ்சிக், கிரான்ட் எலியொட், அண்ட்ரூ எலிஸ், டொம் லதம் (விக்கெட் காப்பாளர்), மைக்கல் மெக்லெனகான், நதன் மெக்கலம், அடம் மில்ன், கொலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷாம், ரொப் நிக்கொல், லூக் ரொன்ச்சி, ஹமிஷ் ரதர்ஃபர்ட், நீல் ப்ரூம் (இவர் கடைசி ஒருநாள் போட்டிக்கும் 20 : 20 போட்டிக்கும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.)
இலங்கைக்கு
எதிராக நடைபெறவுள்ள இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட
ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நியூ ஸிலாந்து அணியின் தலைவராக கய்ல்
மில்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணியின் தலைவராக
முன்னர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரின்போது பெருவிரலில் காய மடைந்ததால்
கேன் வில்லியம்ஸன் நாடு திரும்பியுள்ளார்.
இலங்கையுடனான கிரிக்கட் தொடரைக் கைவிடுமாறு வழமையான அணித் தலைவர் பிறென்டன் மெக்கலமும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ரொஸ் டெய்லரும் கோரப்பட்டதாலேயே கேன் வில்லியம்சனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் பொருட்டே மெக்கலமும் டெய்லரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளைக் கைவிடுமாறு கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2805#sthash.ksuhs6P2.dpuf

0 Comments