வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் ஊடாக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு
இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சரணாலயத்தின் ஊடாக புத்தளம் முதல் மன்னார் வரை நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள செய்திகளை அடுத்தே, இந்த வழக்கை புத்தளத்தில் வசிக்கும் மக்கள் சிலர் தாக்கல் செய்ததாகத் தெரிகிறது.
இந்த வீதியை அமைப்பதற்கான முடிவு சுற்றாடல் விதிகளை மீறும் செயல் என இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் வில்பத்து பகுதியில் இருக்கும் வன விலங்களுக்கும், அந்த வழியாக செல்லும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்த மார்ச் மாதம் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

0 Comments