வடக்கில்
தமிழ் மக்களின் மனித உரிமை குறித்து குரல் எழுப்பும் ஜெயலலிதா 33
வருடங்களின் பின்னர் யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்கள் தமது
வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிக்கையில் அந்த மக்களுக்கான மீன்
வளத்தை தமிழக மீனவர்களை கொண்டு கொள்ளையடிப்பது நியாயமானதா? என்று
மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன
கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தமது சகோதர மக்களுக்காக தமிழக முதல்வர் வழங்கும் பரிசா என்று கேள்வியெழுப்புகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மீனவர்கள் தமிழக கடல் பகுதிக்குள் அத்து மீறி பிரவேசிப்பதனால் அங்கு கைது செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். அப்படியாயின் தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும்போது அவர்களை எமது கடற்படையினர் கைது செய்வது எவ்வாறு அநீதியாகும் என்று தமிழக முதல்வரிடம் கேள்வியெழுப்புகின்றோம்.
இந்திய மீனவர்கள் 80 பேரும் 47 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் மீனவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் இலங்கை மீனவர்கள் 154 பேரும் 29 படகுகளும் தமிழகத்தில் தடுத்து வைக்பபட்டுள்ளதன் காரணமாக எமது மீனவர்களுடம் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றமை தமிழக முதல்வருக்கு மறந்துபோயுள்ளமை கேள்விக்குறியாகும்.
தமிழக மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சருக்கு கவலை இருப்பதைப்போன்று எமது மீனவர்கள் குறித்து எமக்கும் கவலை இருக்கின்றது என்பதனை கூறவேண்டும். உலக மீனவர் தினத்திலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கூறுகின்றார். ஆனால், உலக மீனவர் தினத்தன்று எமது மீனவர்களும் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் அழுத்தம் காரணமாக தமிழகத்தில் உள்ள எமது மீனவர்களுக்கு உணவுகூட வழங்கப்படுவதில்லை. எமது தூதரக அதிகாரிகள் கூட மீனவர்களை பார்ப்பதற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள எமது மீனவர்களின் உணவுத் தேவைகளுக்காக மீனவ திணைக்களத்திலிருந்து நிதி இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உணவுத் தேவை உள்ளிட்ட சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தூதரக அதிகாரிகளும் அவர்களை சென்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிக அதிகளவான மீனவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள எமது மீனவர்களுக்கு மனிதாபிமான தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், வடக்கில் தமிழ் மக்களின் மனித உரிமை குறித்து குரல் எழுப்பும் ஜெயலலிதா 33 வருடங்களின் பின்னர் யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிகளை முன்னெடுக்கும்போது அந்த மக்களுக்கான மீன் வளத்தை தமிழக மீனவர்களை கொண்டு கொள்ளையடிப்பது நியாயமானதா? இது தமது சகோதர மக்களுக்காக தமிழக முதல்வர் வழங்கும் பரிசா என்று கேள்வியெழுப்புகின்றோம்.

0 Comments