Subscribe Us

இதேல்லாம் எங்க உறுப்பட போகுது ! பாடசாலைக் கணினியில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்கள்!

பாடசாலைக் கணினியில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்கள் நான்கு பேர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த அரும்பார்த்த புரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் நான்குபேர் பள்ளிக் கணினியில் ஆபாசப் படம் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாது இதனை பள்ளி மாணவிகளுக்கும் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோரிடம் மாணவிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாணவிகளின் பெற்றோர் திரண்டு பள்ளி முன்பு முற்றுகையிட்டு, சம்மந்தப் பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் பள்ளிக்கு விரைந்து சென்று "ஆசிரியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும்" என உறுதி கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பள்ளியில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நான்கு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் "இதுகுறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் இ வல்லவன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments