(ISHAM MARIKKAR)
இலங்கையில் நடைபெற்று முடிந்த 23 வது பொதுநலவாய மாநாட்டின் போது நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய, சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த சதாம் திக்ரான் சாஜஹான், அர்ஷத் அலி அமீனுல்லாஹ், முஸ்அப் ஷாதிர் மஹ்பூப் , ஷஹீக்கா சலாஹுடீன் , செய்னுதீன் இஷாம் மரிக்கார் ஆகியோரை புத்தளம் மக்கள் கோலாகரமாக இன்று பிற்பகல் வரவேற்றனர்.
இவ்வைபவத்திற்கு புத்தளத்தின் இளைஞர் வட்டங்கள், மாணவர் சமூகம், சமூக நிறுவனங்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் புத்தளத்தின் அனைத்து மக்களின் பங்கேற்று மிக விமர்சையாக நடைபெற்றதும் குறிப்பிடதக்கது
இப்பயணம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் புத்தளம் தாபற்கந்தோரில் ஆரம்பிக்கப்பட்டு புத்தளம் பிரதான வீதிகளிலும் கடந்து புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அஸ்வர் மண்டபத்தை வந்தடைந்தனர். இவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தில் பிரதம அதீதியாக புத்தளம் நகர சபைத்தலைவர் K.A Bais , பெரிய பள்ளித்தலைவர் மற்றும் புத்தள அரசியல் வாதிகள் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து இவ்விழாவை சிறப்பித்தனம குறிப்பிடதக்கது.
வரவேற்பின் போது
அஸ்வர் மண்டபத்தில்





















0 Comments