Subscribe Us

மருத்துவ உலகம் கண்டறிந்த உயிர் இரகசியம்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய மருத்துவ விஞ்ஞானம் முன்னேறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தவை இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவக் கண்டுபிடிப்புக்கள் தான். வரலாற்றுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு மருத்துவக் கண்டுபிடிப்பும் மற்றுமொரு புதிய மருத்துவ ஆய்வுக்கும் வழிவகுத்தது என்றுதான் கூற வேண்டும்
.
 
மனித உடல் என்ற ஓர் அற்புதமான இயந்திரம் பல கோடிக்கணக்கான நுண் அங்கிகளைக் கொண்டு தனித்தனியாகவும் கூட்டாகவும் சகல துறைகளுடனும் ஒத்துழைத்து இயங்கும் 
 
விதத்தில் அமைந்துள்ளது என்பது மருத்துவத்துறையே வியக்கும் ஒரு விடயமாகும். உடலையும் அதன் இயக்கத்தையும் செயற்பாடுகளையும் ஏற்படும் நோய்களையும் புரிந்து கொள்ள மனிதன் ஆரம்ப காலம் முதல் முயற்சி செய்து வந்துள்ளான்.
 
புராதன எகிப்தியர்கள் மனித உடலின் உடற் கூற்றியலை நன்கு புரிந்து வைத்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இவர்கள் இறந்த உடல்களை பதப்படுத்தி பிரமிட்டுக்களில் நீண்ட காலம் கெடாமல் வைத்திருக்கும் கலையை அறிந்திருந்தனர். மருந்துக் கலவைகளையும்இ மந்திரங்களையும் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்தினர் என்பதை ஓலைச் சுவடிகளில் காணலாம்.
 
எனினும்இ மருத்துவத்துறையை விஞ்ஞானமாக மாற்றி அறிவுபூர்வமாக ஆராய்ந்தவர் கிரேக்க அறிஞர் ஹிப்போகிரட்டிஸ் (கி.மு.460) என்பவரே. இவரே நோய்க்கான காரணிகளை அறிந்து வைத்தியம் செய்யும் நவீன உத்தியைக் கையாண்டவர். அதனால் இவரை மருத்துவவியலின் தந்தை என்பதுடன் மருத்துவத்தின் புனிதத்தைக் காக்கவென எல்லா மருத்துவகளும் மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கும் போது இவர் பேரில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.
 
ஹிப்போகிரட்டிசைத் தொடர்ந்து அவரது கருத்துக்களால் கவரப்பட்டவரான குளோடியஸ் கேலன் (131கி.மு.) லியனாடோ டாவின்சி, அந்திரியாஸ் வசாலியாஸ், வில்லியம் ஹார்வே முதலானோர் மனித உடற்கூற்றியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தனர். (1628 கி.பி.) ஆண்டுகளில் மனித இதயம், இரத்தச் சுற்றோட்டம், இதயத் துடிப்பு, இதய நரம்புகளின் பாதிப்பு எவ்வாறு இருதய நோய்களை ஏற்படுத்துகின்றன போன்ற கருத்துக்கள் இன்றும் மதிப்பு வாய்ந்தனவாக உள்ளன.
 
மருத்துவத் துறையின் மற்றுமொரு பரிமாணம்
 
மருத்துவ விஞ்ஞான அறிவு வளர்ச்சியுடன் வளர்ந்த மற்றுமொரு பரிமாணம்தான் மருத்துவ சிகிச்சை முறைக்கான கருவிகள். 1896ஆம் ஆண்டு மைக்ரோஸ்கோப் என்ற நுணுக்குக்காட்டியின் கண்டுபிடிப்பு பெரும் புரட்சி எனக் கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து X கதிர்களின் கண்டுபிடிப்பு மேலும் மனித உடலின் உட்புறத்தை படம் பிடித்துக் காட்டியது. மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை செய்தல்இ 1901ஆம் ஆண்டு இரத்தத்தின் வகைகள் கண்டுபிடிப்பு என்பன இத்துறை வரலாற்றின் பிரதான மைல்கற்களாக அமைந்தன.
 
19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் நுண்ணுயிர்களுக்கும் தொற்று நோய்களுக்குமிடையில் இருந்த தொடர்பை லூயி பாஸ்ட்டர் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து நுண்ணுயிர்கள் நோயாளர்களில் இருந்து மற்றவர்க்கு பரவுகின்றதென ஜோசப் லிஸ்டர் 1865 ஆம் ஆண்டு நிறுவினார். இவ்விதம் பரவும் நுண்ணுயிர்களை அழிக்க காபோலிக் அமிலத்தை பயன்படுத்தினார். அதன் பயனாக வைத்தியசாலை பரிசோதனை கூடங்கள் வாயிலாகக் நோயாளர் மத்தியில் கிருமிகள் பரவி அதனால் மரணங்கள் ஏற்படுவதை ஆச்சரியகரமான முறையில் அவர் தடுத்தார்.
 
நவீன மருத்துவம்
 
பரிசோதனைகள் வாயிலாக நோயை முதலில் இனங்கண்டு அதற்கான காரணங்களைத் தீர்மானித்து அதன் பின் சிகிச்சை வழங்குவதே நவீன மருத்துவ முறையின் தாற்பரியம். இதற்கான ஆரம்ப கருவிகள் நுணுக்குக் காட்டியும், X கதிர் யந்திரமும் ஆகும். அதன் பின் குறித்த கிருமிகளால் குறித்த நோய்கள் பரப்பப்படுகின்றன என அறிந்து முன்கூட்டியே தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என்ற கருதுகோளின்படி அலக்ஸாண்டர் பிளமிங் (1928) பென்சிலின் தடுப்பூசியைக் கண்டு பிடித்ததால் 2ஆம் உலகப் போரில் காயமேற்பட்டு ஏற்பு வலியால் இறப்பவர்களை காப்பாற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம்மை, போலியோ, கொப்பளிப்பான், றுபெல்லா போன்ற தடுப்பூசிகள் மனிதகுலத்தைக் காக்கும் தேவதைகளாக அமைந்தன.
 
மருத்துவத் துறையின் அடுத்த பெரும் கண்டுபிடிப்பாக அமைந்ததுதான் 1950ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மகப்பேற்று மருத்துவப் பேராசிரியர் கண்டுபிடித்த அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனர். இந்த பொறிமுறையால் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உடல் உள்ளுறுப்புக்களின் அமைப்பையும் இயக்கத்தையும் கண்ணால் பார்க்க முடிந்தது.
 
அத்துடன் X கதிர்களால் ஏற்படும் கதிரியக்க ஆபத்தையும் இது தவிர்த்தது. தாய் சேய் மருத்துவத்தின் பெரும் தூணாகவும் இது அமைந்தது. அடுத்த பாரிய மருத்துவத்துறை பாய்ச்சல்கள்தான் அன்டி பயாடிக் மருந்துகள். 1946ஆம் ஆண்டு எர்னஸ்ட் செயின், ஹோவார்ட் புலோரி ஆகியோர் காச நோய் கிருமிகளை அழிக்கும் ஸ்ரெப்டோ மைசின் மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரொயிட் என்ற வலி நிவாரணி சத்திர சிகிச்சையில் பெரும் பங்கு வகித்தது.
 
இன்றைய மருத்துவம்
 
இன்றைய மருத்துவம் புதிய உயிரொன்றை மனிதனின் மரபணுவை வைத்து பரிசோதனைக் கூடத்திலேயே உருவாக்கி விடும் மனித உயிர் இரகசியத்தை கண்டுபிடித்து விட்டது. இனி கருவிலேயே நோய்களற்ற மனித உயிர் தோன்றிவிடும் என்கிறார்கள் இவர்கள். இத்தனை பிரமிப்புக்களை தந்த இந்த மருத்துவ விஞ்ஞானத்தை நம்பாமல் இருக்க முடியுமா?

Post a Comment

0 Comments