Subscribe Us

300 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 11 பேர் பலி

பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து பூனா­கலை நோக்கிச் சென்ற இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்று 300 அடி பள்­ள த்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 11 பேர் உயி­ரி­ழந்­த­துடன், மேலும் 19 பேருக்கும் மேற்பட்டோர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.
இந்த பாரிய விப த்து சம்­பவம் நேற்று மாலை 6.40 மணி­ய­ளவில் பண்­டா­ர­வ­ளைக்கும் பூனா­க­லைக்கும் இடைப்­பட்ட மாபிட்­டிய என்ற இடத்தில் இடம்­பெற்­ற­தாக பண்­டா­ர­வளை பகு­திக்கு பொறுப் ­பான பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக சிறி­வர்­தன தெரி­வித்தார். மேலும் காய­ம­டைந்த பலரின் நிலைமை கவ­லை க்­கி­ட­மாக உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 
 
குறித்த பகு­தியில் சீரற்ற கால­நிலை தொடர்­வதால் மீட்­புப்­ப­ணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
 
நேற்றை யதினம் மாலை பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து 40 க்கும் மேற்பட்ட பய­ணி­க­ளோடு பூனா­க­லையை நோக்கி இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டி­யொன்று பய­ணித்­துள்­ளது. குறித்த பஸ் வண்­டி­யா­னது மா­பிட்­டிய பிர­தே­சத்தை அண்­மித்த போது பாதையை விட்டு விலகி சுமார் 300 அடி பள்­ளத்தில் வீழ்ந்­துள்­ளது. குறித்த பிர­தே­சத்தில் சீரற்ற கால­நிலை தொடர்­வதால் விபத்­துக்­குள்­ளான பஸ் வண்­டி­யி­லி­ருந்து உட­ன­டி­யாக காய­ம­டைந்­த­வர்­களை மீட்டு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வதில் மீட்புப் பணி­யா­ளர்கள் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். எனினும் விபத்­தை­ய­டுத்து உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு பொலிஸார் விரைந்த நிலையில் மீட்­புப்­ப­ணி­க­ளுக்­காக இரா­ணுவம், தீய­ணைப்புப் படை­யி­னை­ரையும் சம்­பவ இடத்­திற்கு வர­வ­ழைத்­தனர். இத­னை­ய­டுத்து பொது­மக்­களின் துணை­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட மீட்புப் பணி­களில் காய­ம­டைந்­த­வர்கள் தியத்­த­லாவை, பண்­டா­ர­வளை வைத்­தி­ய­சா­லை­களில் உட­ன­டி­யாக அனு­ம­திக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
 
தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 12 பேரில் ஒரு­வரின் நிலை கவ­லை க்­கி­ட­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வோ­ருக்கு மேல­தி­க­மாக மேலும் ஒருவர் பண்­டா­ர­வளை வைத்­தி­ய­சா­லையிலும் 6 பேர் பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர். சிறு காயங்­க­ளுக்­குள்­ளான சிலர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­களை பெற்­றுக்­கொண்டு வீடு திரும்­பி­யுள்­ளமை குறிப்­பிட்­டத்­தக்­கது.
 
இதே­வேளை சம்­பவம் தொட ர்பில் பொலிஸ் ஊட­கப்­பேச்­சா ளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­ய ட் சர் அஜித் ரோகண தகவல் தரு­கை யில்,
 
சீரற்ற கால­நிலை மற்றும் விபத்தின் பார­தூரம் ஆகி­ய­வற்றை கருத்­திற்­கொண்டு மீட்­புப்­ப­ணி­க­ளுக்கு இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்பு பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. பஸ் வண்டி வீழ்ந்து விபத்­துக்­குள்­ளான பள்­ளத்தில் தொடர்ந்தும் தேடு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. காய­ம­டைந்­த­வர்கள் எவ­ரேனும் அப்­பள்­ளத்தில் கிடக்­கின்­ற­னரா என்­பது தொ டர்பில் தேடு­தல்கள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­கின்­றன என்றார்.
 
இதே­வேளை சம்­பவ இடத்­துக்கு சென்ற ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் மீட்பு பணி­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் பொலிஸ் இரா­ணுவம் தீய­ணைப்பு பிரிவு ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­கொண்டு நட­வ­டிக்­கைளை மேற்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் காய­ம­டைந்­த­வர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்று பார்­வை­யிட்­ட­துடன் தேவை­யான உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு நடவடிக்கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுகின்­றன என்றார்.

Post a Comment

0 Comments