Subscribe Us

கல்பிட்டியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியை விற்ற அரசியல் வாதி கைது.

அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை போலி ஆவணமொன்றை தயாரித்து விற்பனை செய்த ஆளும் கட்சியின் அரசியல்வாதி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் சரத் சமந்த பெரேராவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 ஏக்கர் காணிக்கு போலி ஆவணங்களை தயாரித்து, பெல்ஜியம் நாட்டு முதலீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஐந்து கோடி ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் நடத்திய நீண்ட விசாரணைகளின் பின்னர் பிரதேசசபைத் தலைவர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர.

நன்றி: PUTTALAM TODAY.

Post a Comment

0 Comments