
சென்னையில் நடைபெற்றுவரும் உலக சதுரங்கப் பட்டத்துக்கான போட்டியின்
எட்டாவது ஆட்டமும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையிலேயே இந்தக்
கேள்விகள் எழுந்துள்ளன.
எட்டாவது போட்டியின் முடிவில் ஆனந்தை எதிர்த்து
ஆடும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 5-3 எனும் புள்ளிகள் கணக்கில்
முன்னணியில் இருக்கிறார்.
இன்னும் 1.5 புள்ளிகள் எடுத்தால் உலகச் சதுரங்கப் பட்டத்தை கார்ல்சன் வெல்வார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற 6.5 புள்ளிகளே தேவை எனும் சூழலில், கார்லசனுக்கு இன்னும் மூன்று போட்டிகளை டிரா செய்தால் போதும்.
ஆனால் ஆனந்தைப் பொருத்தவரை அவர் அடுத்த நான்கு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும் எனும் நிலை உள்ளது.
இன்று நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தை 33 நகர்வுகளுக்கு பிறகு வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்தனர்.
இந்தப் போட்டி 75 நிமிடங்களே நடைபெற்றது.
போட்டி சென்று கொண்டிருப்பதை பார்க்கும்போது,
அடுத்த ஆட்டத்தில் தான் கூடுதல் விறுவிறுப்பை காட்டவேண்டும் என்பதை
உணர்ந்துள்ளதாகவும், அதை அடுத்த போட்டியில் செய்ய முயற்சிப்பேன் எனவும்
போட்டிக்கு பிறகு ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதன்கிழமை ஓய்வுக்கு பிறகு ஒன்பதாவது போட்டி
வியாழக்கிழமையன்று நடைபெறும். அந்தப் போட்டியில் வென்றால் அவர் தனது
பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டும்.
0 Comments