Subscribe Us

header ads

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை முரளீதரனுக்கு உண்டு

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரனுக்கு உண்டு என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் முரளீதரன் அவ்வாறு நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை தொடர்பில் நடைபெற்ற விவாத்தின் போது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதமர் கமரூன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்ன் பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முரளீதரன் தெரிவித்திருந்தார்.
முரளீதரனின் அறக்கட்டளை முக்கியமான தொண்டாற்றி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை அமர்வுகளில் பங்கேற்று கேள்வி எழுப்பியது சரியானது என்றே முரளீதரன் கருதினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்ள முரளீதரன் முயற்சித்தார் எனவும், அது அவரது உரிமை எனவும் பிரதமர் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments