Subscribe Us

கைக்குத்தல் அரிசி !! நம் உடம்பு ஏற்றுக் கொள்ளும் அற்புதமான உணவு

இன்று மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் நன்மையைகாட்டிலும் தீமையே அதிகம். இதனால் இன்று பலர் தனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ள பெரிதும் ஆசைப்படுகின்றனர்.

நாவிற்கு சுவை தரும் உணவைகாட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே சிறந்தது. அதிலும் எண்ணெய், நெய் நிறைந்த உணவுபொருட்களை குறைவாக உட்கொண்டால் நமது உடல் சீராக செயல்படும்.

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது.

கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது.

இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது.

மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments