நான்காயிரம் கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்பொருட்டு நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாக
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சையின் மூலம் இணைத்துக்கொள்ளப்படும் கிராம
உத்தியோகத்தர்களை, வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளில் சேவைக்கு
அமர்த்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தாரதர உயர்தர பரீட்சையின் மூன்று பாடங்களில்
சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சர்
மேலும் குறிப்பிட்டார்.


0 Comments