Subscribe Us

ஆட்பதிவுத்திணைக்களம் 7 ஆம் திகதி திறந்திருக்கும்

ஆட்பதிவுத்திணைக்களம் டிசெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமையன்று திறந்திருக்கும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சைக்கு இம்முறை தோன்றுகின்ற மாணவர்களின் நலன்கருதியே 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆட்பதிவுத்திணைக்களத்தை திறப்பதற்கு முடிவு செய்ததாகவும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் அன்றைய தினத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சை டிசெம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments