Subscribe Us

header ads

வெளியாகியது பிளேஸ்டேசன் 4

கேமிங்கில் ஆர்வமுள்ள இளைஞர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த

சொனி நிறுவனத்தின் தயாரிப்பான இது வெளியாகும் முன்னரே பலத்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இதனைக் கொள்வனவு செய்யும் பொருட்டு பாவனையாளர்கள் பலர் ஆர்வமாக கடுமையான காலநிலையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து கேமிங் சாதனத்தை கொள்வனவு செய்துள்ளனர்.

இச் சாதனமானது 400 அமெரிக்க டொலர்களாக விலையிடப்பட்டுள்ளது.
இதன் முன்னைய வெளியீடான பிளேஸ்டேசன் 3 இன் அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பிளேஸ்டேசன் 4  வெளியாகியுள்ளது.

இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள்,

8GB of DDR5 RAM,

low-power x86-64 "Jaguar" eight-core chip.

graphics powered by a 1.84 TFLOP AMD Radeon "next engine."

இது புது வித கேமிங் அனுபவத்தைத் தருமென சொனி தெரிவிக்கின்றது.

இதன் பிரதான போட்டியான மைக்ரோசொப்டின் எக்ஸ் பொக்ஸ் வன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.

எனினும் அது பிளேஸ்டேசனை விட 100 அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

பிளேஸ்டேசன் 4 வின் முக்கிய பிரச்சினை பிளேஸ்டேசன் 3 இற்குரிய கேம்களை இதில் விளையாடமுடியாமையாகும்.ஆனாலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிளேஸ்டேசன் 4 வட அமெரிக்காவில் நேற்று இரவு வெளியாகியது.

Post a Comment

0 Comments