1781 : கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 : போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1855 : துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 : தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1915 : கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 : ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
1929 : ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1945 : யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 : எதிர்கால பலஸ்தீன அரசுக்காக பலஸ்தீனத்தைப் பிரிப்பதற்கு ஐ.நா. பொதுச்சபை அங்கீகாரமளித்தது.
1950 : வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 : நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
1963 : 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.
1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எவ்.கென்னடி படுகொலை தொடர்பாக விசாரிப்பதற்கு வொரன் ஆணைக்குழுவை ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் நியமித்தார்.
1982 : ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1987 : கொரிய விமானமொன்று தாய்லாந்து, பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1990: 15.01.1991 ஆம் திகதிக்குள் ஈராக்கிலுள்ள வெளிநாட்டுப் பணயக் கைதிகளும் விடுவிக்கப்படாவிட்டால் சர்வதேச நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை நிறைவேற்றியது.
2006 : அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.
2007: கரீபியன் பிராந்தியத்தின் மார்ட்டினிக் கரையோரத்தில் 7.4 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.


0 Comments