284 : டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனார்.
1194 : இத்தாலியின் பலேர்மோ நகரம் ஜேர்மனியின் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
1194 : இத்தாலியின் பலேர்மோ நகரம் ஜேர்மனியின் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
1658 : இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு
ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1700 : சுவீடனின் 12 ஆம் சார்ள்ஸ் மன்னன், நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தார்.
1910 : பிரான்சிஸ்கோ மடேரோ மெக்ஸிகோ ஜனாதிபதி போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை ஜனாதிபதியாகவும் அறிவித்தார். மெக்ஸிகோ புரட்சி ஆரம்பமாகியது.
1917 : யுக்ரேன் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1923 : ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது.
1940 : இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
1947 : இளவரசி எலிஸபெத் (பிரிட்டனின் தற்போதைய அரசி) இளவரசர் பிலிப்பை திருமணம் செய்தார்.
1962 : சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை வாபஸ் பெற்றது.
1977 : 71 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
1985 : மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியிடப்பட்டது.
1988 : இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் சோவியத் அதிபர் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1992 : இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1991: அஸர்பைஜனானில் அமெரிக்கப் படையினரால் ஹெலிகொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் ரஷ்யா, கஸகஸ்தான், அஸர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த சமாதானத் தூதுக் குழுவின் 19 பேர் உயிரிழந்தனர்.
1994: அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1998 : சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1998:கென்யா, தான்ஸானியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒஸாமா பின் லாடன் பாவம் செய்யாத மனிதர் என ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனப்படுத்தியது.
1999 : மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
0 Comments