சீனாவில் பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் குவாங்சி பிராந்தியத்தின் சென்ஸ்கி நகரிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இவ்விபத்து தொடர்பில் தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விபத்தில் உயிரிழந்த 11 பேரும் பெண்கள் எனவும் 17 பேர் இதில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை தரைமட்டமாகியுள்ளதுடன் அருகில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
மேலும் பல மைல் தூரத்திற்கு அப்பாலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தெரியவருகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

0 Comments