ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால்
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று பிற்பகல் 1:04 க்கு சமர்ப்பித்து உரையாற்றுவார்.
மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2010 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பதில் நிதியமைச்சரான சரத் அமுனுகமவினால் கணக்கு வழக்குத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.அத்துடன் 2006ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து நவம்பர் 22ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
அத்துடன் குழு நிலை விவாதங்கள் டிசெம்பர் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சனிக்கிழமைகள் அடங்களாக 16 நாட்களுக்கு இடம்பெறும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறாது. 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டம் இடம்பெறும் காலப் பகுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு விஜயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று சமர்ப்பிக்கபடவிருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், வளாகம் மற்றும் உறுப்பினர்களின் அறைகள் யாவும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதிகளும் படையினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
2011 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளும் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு மேலாக தண்ணீர் போத்தல் வீசப்பட்டது. இந்நிலையில், இம்முறை மக்கள் கலரிக்கு வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முதலமைச்சர்கள் வருவர்
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இம்முறை சபாநாயகரின் கலரிக்கு வருகை தருவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments