இன்று 2013.10.30ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் கல்பிட்டி பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தை அரசாங்கம் தமது பரிபாலனத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இதன் பிரகாரம் பைசர் தலைமையிலான பணிப்பாளர் சபை இயங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவினை வடமேல் மாகாண முதலமைச்சர் கொளரவ தயாஶ்ரீ ஜயசேகர அவர்கள் தமது அதிகாரத்தைப் பயன் படுத்தி கடிதம் மூலமாக இன்று நன்பகல் அறிவித்தார். இந்த அறிவிப்பின் பிரகாரம் உடனடியாக விரைந்த சிலாபம் பிரதி ஆணையாளர் காரியாலயத்தின் சிரேஷ்ட உத்தயோகத்தர் சுமனவீர பணிப்பாளர் சபையின் சகல அதிகாரங்களையும் கைப்பற்றினார். அத்துடன் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் தற்காலிக இடைநிறுத்தம் செய்யுமாறும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
கொளரவ முதலமைச்சர் தயாஷிரீ ஜயசேகர அவர்களின் கவணத்திற்கு பணிப்பாளர் முகைதீன் தலைமையில் 29ம் திகதி நேற்று கல்பிட்டி கூட்டுறவின் எல்லா அதிகாரிகளும் சென்று முறையிட்டதன் படி முதல் அமர்விலேயே இந்த நடவடக்கையை எடுத்தமைக்காக முதலமைச்சருக்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்த மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த அவர்களுக்கும் கற்பிட்டி பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திரு. சுமனவீர தெரிவிக்கும் கருத்து.......
இன்றிலிருந்து கல்பிட்டி பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக கல்பிட்டி பிரதேச செயலாளரும் (Divisional Secretary) , உப தலைவராக தானும் செயற்படுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் வங்கிக் கணக்குகளின் கையொப்பமிடும் அதிகாரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. இதற்குமேல் பணிப்பாளர் சபைத்தலைவர் பைசர், உபதலைவர் பதூர்தீன் ஆகயோரினதும் மற்றும் ஏனைய 5 பணிப்பாளரகளினதும் எந்தவித தீர்மாணங்களும் செல்லுபடியாகாது.
அது மட்டுமின்றி பணிப்பாளர் சபையின் தலைவர், உப லைவர், மற்றும் சிலரின் தீர்மாணங்கள் முன்னுக்குப்பின் முரணானதாகக் காணப்படுவதுடன் மிகவும் மோசமான நிர்வாகத்தை நடத்திவந்துள்ளமையும், பெருவாரியான பணம் மாசடி செய்யப்பட்டுள்ளமையும் கோவைகளை பரிசோதனை செய்த்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக உப தலைவர் தமது பிள்ளைகள் இருவரின் பெயரில் தான் சாட்சியாளராக் கையொப்பமிட்டு தலா 50,000 .விதம் 150,000 கடன்பெற்றுள்ளதுடன் அதில் ஒரு சதம் கூட மீளச்செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
என சுமனவீர தெரிவித்தார்.
இதன் மேலதிக செய்திகள் திரட்டப்பட்டு வருகிறது. அது தாமதமின்றி உடனுக்குடன் உங்களை வந்துசேரும்.
தகவல் : Iam Kalpitiyan.

2 Comments
superb
ReplyDeleteஇதே கூட்டுறவு சங்க தேர்தலிலே கல்பிட்டியிலிருந்து மாம்புரி வரையும் அதிக வாக்குகளை பெற்றவர் எனது தந்தை பஸீர் அவர்கள்( இன்பாஸையும் விட அதிகம்) ஆனால் அந்த கூட்டுறவு சங்க கு அவரை ஒரு அங்கத்தவராக போடும்படி கேட்டபோது இப்போது இந்த கூட்டுறவு சங்கத்தை நசப்படுத்திய இவர்கள் அனைவரும் இணைந்து பஸீர் எல்லாதுலயும் நூலுக்கு நிப்பான்னு சொல்லி அந்த கு அவரை அங்கத்தவர் ஆக்காமல் தடுத்தார்கள். அதனால் பஸீர் இன்றுவரை கூட்டுறவு சங்கத்திலே தனித்து செயல் படுகிறார் எந்த அதிகாரமும் இல்லாமல்...
ReplyDelete