மரணத்தை ஏற்படுத்தும் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று
இரவு முழுவதும் இளம் பெண்ணொருவர் உறங்கி கொண்டிருந்த கட்டிலில் அவருடன்
இருந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்
நடந்துள்ளது.அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கலேன்பந்துனுவெவ என்ற பிரதேசத்தில் உள்ள விவசாய கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விவசாய கிராமத்தில் இந்த 20 வயதான யுவதியின் வீட்டில் தாய், தந்தையுடன் இரண்டு சகோதரர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த யுவதி தனது அறையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது வழக்கம். சம்பவம்
நடைபெற்ற தினத்தில் வழமைபோல் இரவு நித்திரைக்கு சென்றுள்ளார்.
அதிகாலையில் நித்திரைவிட்டு எழுந்த யுவதி, தனது உடலில் ஏதோ ஒரு
உஷ்ணத்தை உணர்ந்த அவர், அதனை கையால் அதனை தடவிப் பார்த்த போது இருப்பது
பாம்பு என அறிந்து அச்சத்தில் அலறிக் கொண்டு கட்டிலில் இருந்து
பாய்ந்துள்ளார்.மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் வந்து அறையின் மின் விளக்கை போட்ட
பொழுது அக்கட்டிலில் கட்டு விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைந்துள்ளார். இரவு முழுவதும் யுவதி உறங்கிய கட்டிலில் இருந்த இந்த பாம்பு யுவதியை தீண்டவில்லை.இந்த நிலையில் யுவதியின் தந்தை பொல்லால் தாக்கியதில் அந்த பாம்பு இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments