தன் மனைவியுடன் பேசியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவரை சவுதி ஷேக் ஒருவர் கதறக் கதற பெல்ட்டால் விளாசிய வீடியோ சில நாட்களுக்கு முன்னர் சமூக தளங்களில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டதே.இந்த வீடியோ ஊடகங்களில் ஒளிபரப்பப் பட்டு தற்போது சவுதியில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பினராலும் சவுதி மக்களாலும் பார்க்கப்ட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவினால் சவுதி அரேபிய மனித உரிமை அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது.
படத்தில் ஆரஞ்சு கலர் உடையில் இருப்பவர்தான் அடிவாங்கிய நபர் இவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அடி தாங்க முடியாமல் அவர் கதற, விட்டுவிடுமாறு கெஞ்ச ஷேக் காதில் விழவில்லை மாறாக பெல்ட் அடியின் உக்கிரம் அதிகரித்துள்ளது.
தன்னுடைய மனைவியுடன் பேசியதற்காகவே இந்த ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் இவ்வாறு மூர்க்கமான முறையில் தாக்கப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய மனித உரிமை அமைப்பு விரைவில் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கி கொடுப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

0 Comments