இந்திய கிரிக்கெட் அணியின்
துடுப்பாட்ட மேதையான சச்சின் டெண்டுல்கர் அடுத்த மாதத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து
ஓய்வு பெறவுள்ளார்.
நவம்பர் 14 முதல் 18 ஆம் திகதிவரை மும்பையில் நடைபெறவுள்ள மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் உலகுக்கு அறிமுகமானவர் சச்சின் டெண்டுல்கர். அதன்பின் கடந்த 24 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை அவர் படைத்தார்.
தற்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் ஏனைய வீரர்களால் கற்பனை செய்வதுகூட கடினமான ஒரு சாதனையாக நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
சச்சின் போன்று விளங்க வேண்டும் என்பது சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, அவரின் சமகாலத்து வீரர்கள் பலருக்குகூட ஒரு கனவாகும். பல்வேறு சாதனைகளைப் படைத்த சச்சின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கிரிக்கெட் உலகில் ஏனைய இளம்
வீரர்கள் எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களை சச்சினும் எதிர்கொண்டார். சாதாரண
வீரர்களைப் போன்றே அவர் ஏனையோரால் நடத்தப்பட்டார். அவர் எதிர்காலத்தில்
கிரிக்கெட் உலகின் கடவுளாக மதிக்கப்படுவார் என்றெல்லாம்
அப்போது யாரும் எதிர்பார்திருக்க முடியுமா என்ன?
இந்த வகையில், சச்சின் தனது கிரிக்கெட்
வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தனக்கு 62 நாட்கள் தேநீர் தயாரித்துக்கொடுத்தார்
என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான நரேந்திர
ஹிர்வானி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நரேந்திர ஹிர்வானி, அப்போட்டியில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புகழ்பெற்றவர். (ஆனால் அதன்பின் 1996 ஆம் ஆண்டுவரை அவர் விளையாடிய ஏனைய 16 டெஸ்ட் போட்டிகளிலும் மேலும் 50 விக்கெட்டுகளையே கைப்பற்றினார்.)
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் அறை சகாவாக விளங்கிய வர்களில் ஒருவர் இவர். நியூஸிலாந்து சுற்றுலாவொன்றுக்கு சச்சினும் நரேந்திர ஹிர்வானியும் தெரிவுசெய்யப்பட்டபோது இருவரின் நட்பு ஆரம்பமாகியது.
ஆனால், 1987 ஆம் ஆண்டு 15 வயதுக்குட்பட்ட இந்திய
அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமின்போது தான்
முதல் தடவையாக சச்சினை சந்தித்தாக தற்போது 45 வயதான ஹிர்வானி கூறுகிறார்.
“நான் 19 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுலாவின் பின்னர் தாயகம்
திரும்பியிருந்தேன். 15 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் அப்போதைய பயிற்றுநர்
வாசு பிரான்ஜிப் எப்போதும் அந்த சிறிய பையன் (சச்சின்) குறித்து உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தார்.
சச்சின் குறித்து கேள்விப்பட்டதும்
வலைப்பயிற்சியின்போது அவருக்கு பந்துவீசச் சென்றேன்.
அக்காலத்திலேயே அவருக்கு பந்து வீசுவது கடினமானதாக இருந்தது”
என நினைவு கூர்கிறார்
நரேந்திர ஹிர்வானி.
“பின்னர் கிரிக்கெட் சுற்றுலாவில்
72 நாட்கள்
சச்சின் எனது அறை சகாவாக இருந்தார். அவர் தன்னை தயார் படுத்திக்கொள்ளும்
விதம் ஏனையவர்களைவிட முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
கிரிக்கெட் தவிர வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார்.
இப்போதும் அப்படித்தான். அவர் சாப்பிடுவது, குடிப்பது, சுவாசிப்பது எல்லாமே அவர் எப்போதும் கிரிக்கெட்தான். இவர் ஒன்றில் நிழல் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்.
அல்லது களத்தில் எவ்வாறு சிறப்பாக செயற்படலாம் என ஆராய்ந்துகொண்டிருப்பார். அதனால் தான் அவர் இன் னும் உயர்ந்த நிலை யில் இருக் கிறார் போ லும்” எனவும் ஹிர்வானி கூறியுள்ளார்.
சச்சினை விட ஒரு வருடத்துக்கு
முன்பாகவே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதால் ஹிர்வானியை
சிரேஷ்ட வீரராக மதித்தார் சச்சின். இதனால் கனிஷ்ட வீரர் என்ற அடிப்படையில்
ஹிர்வானிக்கு சச்சின் தேநீர் தயாரித்துக் கொடுக்க வேண்டியிருந்ததாம்
72 நாட்கள்
சுற்றுலாவில் 62 நாட்கள் அவர் எனக்குத் தேநீர் தயாரித்துக்கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக
நான் கடமைப்பட்டுள்ளேன்.
பின்னர் இது குறித்து அவருடன் பேசும்போது
“உங்களுக்கு
70 வருடங்களுக்கு
தேநீர் தயாரித்துக் கொடுப்பேன் என
நான் கூறியுள்ளேன்” என அந்த ஆச்சரிய அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார் நரேந்திர ஹிர்வானி.
இளம் வயதில் வாகனம் செலுத்துவதற்கு
மிகுந்த ஆசைகொண்டிருந்தாகவும் ஹிர்வானி கூறுகிறார். “அப்போது அவர் வெள்ளை
மாருதி 800
காரொன்றை வைத்திருந்தார். நான் அவரின் வீட்டுக்குச் சென்று அவரின்
பெற்றோர், சகோதரர்களுடன்
உரையாடிக் கொண்டிருக்கும்போது சச்சின் அடிக்கடி குறுக்கிட்டு, “நீங்கள் எப்படி வீட்டுக்குச்
செல்வீர்கள்?” எனக் கேட்பார்.
அப்போது சச்சினை வாகனம் செலுத்த வீட்டார் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வாகனம் செலுத்தும் வாய்ப்பை பெறுவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டிருந்தார். இறுதியில் என்னை காரில் ஏற்றிச்சென்று விடுவதற்கு அவர் அவர் பெற்றோரை சம்மதிக்க வைப்பார்” என ஹிர்வானி கூறியுள்ளார்.
சச்சின் அணித்தலைமையின் கீழும் ஹிர்வானி விளையாடியுள்ளார். ஆனால்,
தலைவர் பதவியில்
சச்சினுக்கு அதிஷ்டமிருக்கவில்லை என ஹிர்வானி கூறுகிறார்.
“அவர் சிறந்த அணித்தலைவராக விளங்கியிருக்கக்கூடும். சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர் அவர்.
ஒரு வீரராக அணியில் தனது இடத்தை இழக்க நேரிடும் என அவர் ஒருபோதும் அஞ்சியதில்லை. ஆனால், அணித் தலைவர் பதவி குறித்து நிச்சயமின்மை காணப்பட்டது” என ஹிர்வானி தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டில் சச்சின் மிகச் சிறந்த
நிலையில் இருந்தபோது இந்தியாவின் தேசிய கிரிக்கெட்
தேர்வாளராக நரேந்திர ஹிர்வானி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“நான் தேசிய கிரிக்கெட் தேர்வாளராக நியமிக்கப்பட்டபின் முதல் தடவை யாக சச்சினை சந்தித்தபோது அவர் என்னை வித்தியாசமான ஒரு பார்வை பார்த்தார். உடனே நாம் இருவரும் வெடிச்சிரிப்பு சிரித்தோம். நான் பயிற்றுநராக இருந்தகாலத்தில் சச்சின் நம்பமுடியாதளவு சிறப்பாக விளையாடினார்.
தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்னை சச்சின் சிறப்பாக எதிர்கொண்டார். அந்தப் போட்டியின் பின்னர் “நீங்கள் நல்ல மனிதரா நல்ல வீரரா என்பதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது என வேடிக்கையாகக் கூறினேன்'' என நரேந்திர ஹிர்வானி தெரிவித்துள்ளார்.
இந்திய
கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட மேதையான சச்சின் டெண்டுல்கர் அடுத்த
மாதத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
நவம்பர் 14 முதல் 18 ஆம் திகதிவரை மும்பையில் நடைபெறவுள்ள மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் உலகுக்கு அறிமுகமானவர் சச்சின் டெண்டுல்கர். அதன்பின் கடந்த 24 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை அவர் படைத்தார்.
தற்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் ஏனைய வீரர்களால் கற்பனை செய்வதுகூட கடினமான ஒரு சாதனையாக நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
சச்சின் போன்று விளங்க வேண்டும் என்பது சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, அவரின் சமகாலத்து வீரர்கள் பலருக்குகூட ஒரு கனவாகும். பல்வேறு சாதனைகளைப் படைத்த சச்சின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=2663#sthash.5BWsQ4fa.dpuf

0 Comments