Subscribe Us

பள்ளிகளில் பறிபோகும் பாதணிகள்

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்]

தொழுகை முடிந்து மூன்று நான்கு பேர் எதனையோ தேடிகொண்டிருந்தனர். அருகில் போய் விசாரிக்கவே செருப்பு தொலைந்து விட்டதாகவும் அதனை தான் தேடிகொண்டிருக்கிறோம் என்று பதில் வந்தது.
அதற்கு நானும் செருப்பை தொலைத்து விட்டேன் என்றவாறு அவர்களோடு இணைந்து தேட துவங்கினேன். அவர்கள் குழுவில் நானும் இணைந்து விட்டேன். என்ன செய்ய இதுதான் வாழ்க்கை.
உண்மையில் செருப்பு தொலைந்து விட்டதா.. அதற்கு கால் ஏதும் உள்ளதோ என்னவோ, இல்லை தொலையவில்லை மாறாக களவாடப்பட்டுள்ளது.
Clipper Thiefபள்ளிக்கு வரும் சிறுவர்களிருந்து பெரியவர்கள் என்று எல்லோரும் இவ்வலைகளில் சிக்குகின்றனர். தூர இடங்களிலிருந்து பள்ளிக்கு வருபவர்கள், வெளி ஊர்களிலிருந்து தொழுகைக்காக வருபவர்கள் தான் பாவம் பாதணி இல்லாமல் தவிக்கின்றனர்.
பள்ளிக்கு தொழுகைக்காக வரும் எவரும் இவ் இழி செயலை செய்யமாட்டார்கள். தொழுகைக்காக பள்ளியுனுள் எல்லோரும் சென்றவுடன் வெளியிலிருந்து வந்தே இந்த நாசகார வேலைகள் இடம்பெறுகின்றன.
செருப்புதானே அப்படி சாதாரணமாக இதனை பார்க்கலாகாது. ஒரு சிலர் கஷ்டப்பட்டு உழைத்து தமது உடைமைகளை வாங்குகின்றனர். அதனை இவ்வாறு பறிகொடுக்கும் போது மனம் இலேசாக வலிக்கத்தான் செய்யும். இன்னும் சிலர் வெறுங்காலுடன் நடுத்தெரு எனும் போது கொஞ்சம் வருத்தம்.
இவ்வாறான போது பள்ளிவாயல்களை குறை சொல்லுவது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. கோபத்தில் கொட்டும் வார்த்தைகள். பள்ளிவாயல் ஒரு பொது நிறுவனம். அதற்கு எங்களுடைய பங்களிப்புக்களை செய்தே அதனை நிருவகிக்கின்றோம். அப்படி இருக்கும் போது இவ்வாறு தனி பொறுப்பு சாடுவது சரியாகாது.
செருப்பு களவாடும் நபர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம். அவர்களில் முதலாவது குறும்புகார சிறுவர்கள். இவர்கள் தங்களின் குறும்புகளில் ஒன்றாக இதனை செய்கின்றனர். பள்ளிகளில் காணப்படும் செருப்புகளை திருடி அதனை அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசி விட்டு செல்வது.
இரண்டாவது போதைபொருள் பயனர்கள். போதைபொருள் பொருள் வாங்க காசு இல்லாத சமயம் பள்ளிகளில் செருப்பை திருடி விற்று தமது தேவையை நிறைவேற்றுகின்றனர்.
Clipperமூன்றாவதாக செருப்புக்களை திருடி விற்பனை செய்வது இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர். களவு போன என்னுடைய பாதணி ஒன்று இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்னொருவர் அணிந்து வருபவரை கண்டு அவரை அணுகவே வீட்டுக்கு பாதணி விற்க வந்த ஒருவரிடம் வாங்கியதாகவும், விலையையும் குறிப்பிட்டு சொன்னார். நான் கடையில் வாங்கிய விலையை விட குறைவாக இருந்தது அவர் சொன்ன விலை. உங்களுடய எண்ணம் புரிகிறது அவர் அவ்வாறாக செய்யக்கூடியவர் இல்லை. இதனை வைத்தே நான் மூன்றாவது என்று சொன்னது.
பாதணிகளை திருடுபவர்கள் சாமர்த்தியமாக இருக்கும் போது எமது உடைமைகளை பாதுகாப்பதில் நாம் அசமந்த தனமாய் இருக்கலாகாதே..
இது பள்ளியில் மட்டும் தான் என்று சொல்ல முடியாது. மற்ற மதஸ்தலங்களிலும் காணப்படலாம். எப்படியோ களவு இடம்பெறுவதால் இயலுமான வரை எமது தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம், அல்லது பாதுகாப்புக்கு என்று ஒருவரை நிறுத்தலாம்.
பாதணிகள் களவாடப்படுவதை காட்டி எமது வணக்க வழிபாடுகளை குழப்பாமல் சீர்படுத்துவோம். இறைவனின் பொறுப்பில் விடுவோம்.
பள்ளிவாயல் – பாதணி களவு – பராமுகமாக..(PO)

Post a Comment

0 Comments