35 நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி
உரையாடல்களை அமெரிக்கா கண்காணித்ததாக, சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியரான எட்வர்ட் ஸ்னோடனினால்
கசியவிடப்பட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக பிரிட்டனின் கார்டடியன்
பத்திரிகை தெரிவித்துள்ளது.வெளிநாட்டு அரசியல்வாதிகள் தொடர்புகொள்பவர்களின் விபரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்க வெள்ளை மாளிகை, ராஜாங்கத் திணைக்களம், இராணுவத் தலைமையகமான பெண்டகன், ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா
மேர்கெலின் தொலைபேசியை அமெரிக்க தேசிய புலனாய்வு முகவரகம் கண்காணித்ததாக
வெளியான தகவல் இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்
இப்புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
35 நாடுகளின் தலைவர்களின் சுமார் 200
தொலைபேசி இலக்கங்கள்,
அமெரிக்க தேசிய
புலனாய்வு முகவரத்துக்கு மற்றொரு அமெரிக்க அரச திணைக்களத்தைச் சேர்ந்த
அதிகாரியொருவரால் வழங்கப்பட்டதாக 2006 ஒக்டோபர் மாதத்துக்குரிய இரகசிய ஆவணமொன்றில்
குறிப்பிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.


0 Comments