இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில்
இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த ஐந்தாவது ஒருநாள் சர்வதேச
கிரிக்கெட் போட்டி கைவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டாக் நகரில் இப்போட்டியை
நடத்ததத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு 5 நாட்களாக கடும் மழை பெய்வதால்
நாளை போட்டி நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
'போட்டியை கைவிடுவதாக
உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு எமக்கு அதிகாரமில்லை. போட்டிக்கான
அதிகாரிகள் இன்று காலை இதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பர்.
ஆனால் இப்போட்டிக்கான
டிக்கெட்டுக்களின் கட்டணங்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என நாம்
ஏற்கெனவே அறிவித்துள்ளோம். இதன் அர்த்தம் இப்போட்டி உத்தியோகபூர்வமாக
கைவிடப்பட்டுள்ளது என்பதாகும் என ஒடிஷாமாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர்
ஆஷிர்பாத் பெஹேரா
கூறியுள்ளார்.
பெரும்பாலும் வீரர்கள் அரங்குக்கு
வருவதற்கு வாய்ப்பில்லை. நடுவர்கள் மாத்திரம் மைதானத்துக்கு வந்து
போட்டி கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பர் எனவும்
ஆஷிர்பாத் மெஹேரா
தெரிவித்தார்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 4
ஆவது போட்டியும்
மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments