Subscribe Us

header ads

நகைப்பிற்குரிய ஊடக அறிவிப்புகள் - வீழ்ச்சியடையும் அமெரிக்க டாலர்...! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

 


இலங்கையில் அமெரிக்க டாலருக்கு நிகராக சுமார் Rs 175 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை வீழ்ச்சி கண்ட இலங்கை நாணயம் சிறுகச் சிறுக 330 ரூபாய்கள் வரை (செயற்கையாக) திரும்பி வருவதனை ஊடகங்களில் தொடர்ந்து வீழ்ச்சி காணும் அமெரிக்க டாலர் என்றோ பலமடையும் ரூபாய் என்றோ கூறுவது அபத்தமாக தெரிகிறது.


அதுபோல் தான் இலங்கையில் தங்க விலையும் (22 கரட்) சுமார் Rs.65,000 ரூபாய்களில் இருந்து 200,000 ரூபாய்கள் வரை அசாதரணமாக உயர்ந்துள்ள தங்க விலை சற்று குறையும் போதெல்லாம் தங்கவிலையில் தொடர் வீழ்ச்சி எனக் கூறுவதும் அபத்தமாக தெரிகிறது.

குறைந்த பட்சம் 2018 ஆண்டு பெறுமதிகளுக்கு திரும்பிய பின்னர் அதிலிருந்து இலங்கை ரூபாய் பலமடைந்தாலோ அல்லது தங்கதின் விலை குறைந்தாலோ மாத்திரம் தான் அமெரிக்க டாலரின் பெறுமதியிலும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்படுவதாக கூறலாம்.. !

அதுவரை அவை பழைய நிலைமைக்கு படிப்படியாக திரும்புவதாகவோ (Recover) அல்லது அசாதாரண விலை உயர்விலிருந்து சற்று மாற்றம் கண்டுள்ளதாகவோ தான் கூற முடியும்...!

சிலர் ஒருபடி மேலே சென்று இலங்கை ரூபாவிற்கு எதிராக அமெரிக்க டாலர் தொடர்ந்து வீழ்ச்சி என்றும் எழுதுகிறார்கள்..

ஓரளவு Recover ஆவதாக பழைய நிலை நோக்கி சிறிது சிறிதாக திரும்புவதாக report செய்வதே பொறுத்தமானதாகும்!

வருடாந்தம் மீளச் செலுத்த வேண்டிய 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாதுள்ளோம் என வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்த பின் தான் நாம் (வெளிநாட்டு நாணய வைப்பீட்டை செயற்கையாக தக்க வைத்து) இலங்கை நாணயத்தின் பெறுமதியை தற்காலிகமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்!

இன்றேல் எமது நாணயம் அமெரிக்க டாலருக்கு 500 ஆக இருத்தல் வேண்டும், தங்கத்தின் விலையும் அவ்வாறே!

அதேபோன்றுதான் பன்மடங்காக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலாவணி அப்படியே இருக்க பணவீக்கமும் மக்களது நுகர்வில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி தான் பணவீக்கத்தை செயற்கையாக சிறிய அளவில் குறைத்து வருகிறது எனலாம்.

பொருளாதார நெருக்கடி 2019 இருந்ததை விட இரட்டிப்பாக தீவிரமடைந்துள்ளமையையே இவை உணர்த்துகின்றன!

பொருளாதார விவகாரங்களை நடுநிலையாக அரசியல் சாயங்களுக்கு அப்பால் நாம் அவதானிக்க வேண்டும்.

இந்த தேசத்தின் மொத்த தேசிய உற்பத்தி சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தால் 128% அதாவது சுமார் 85 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் சுமையில் தலைக்கு சுமார் 15 இலட்சம் கடனில் நாம் வாழுகிறோம், என்பது மேலதிக தகவலாகும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
14.05.2023

Post a Comment

0 Comments