Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலை U20 அணியும் கல்பிட்டி கோட்டம் 2023 சம்பியன் ஆனது. (படங்கள் இணைப்பு)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கோட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை 20 வயதிற்கு கீழ் அணி சிறப்பான விளையாடி இறுதி போட்டியில் நுரைச்சோலை தேசிய பாடசாலை அணியை 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று கோட்ட மட்ட சம்பியன் ஆனது

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட அணிகளான U16 அணி (மூன்றாம் இடம்), U18அணி(சம்பியன்), U20(சம்பியன்) மூன்று அணிகளும் வலயமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

-Rizvi Hussain-




Post a Comment

0 Comments