Subscribe Us

header ads

சேட் ஜிபிடி நூல் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டது.

 


அமெசானில் மட்டும் சேட் ஜிபிடி எழுதின 200 நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அமேசான் சேட் ஜிபிடிக்கு ஒரு எழுத்தாளர் பக்கத்தை வேறு உருவாக்கி கொடுத்துவிட்டது.

கூகிள் எல்.எம் மியூசிக் (Google LM music)என்ற தளத்தை கூகிள் வெளியிட்டுள்ளது. அங்கே டெக்ஸ்ட் டு மிச்யூஸிக், அதாவது கவிதையை அங்கே தட்டச்சினால் அதற்கான மியூஸிக், இசைக்கருவிகளை எல்லாம் கூகிளே கொடுக்கும்

உங்கள் விடியோக்களுக்கு ராயல்டி இல்லாத ஏ.ஐ இசை வேண்டுமா? சவுன்ட்புல்  (Soundful) தளம் உதவுகிறது

முழுக்க முழுக்க ஏ.ஐ இசையமைத்து பலமில்லியன் வியூக்களை பெற்ற பாடல்கள் பல யுடியூப்பில் உள்ளன. சீனாவில் உள்ள டென்சென்ட் (tencent) எனும் இணையதளம் முழுக்க ஏ.ஐயையே இசை அமைத்து , பாடவைத்து 1000 பாடல்களுக்கு மேல் யுடியூபில் வெளியிட்டுள்ளது. அதில் டுடே (Today) எனும் பாடல் 10 கோடி பேரால் கேட்ககபட்டு $350,000 (ரூ 3 கோடி) வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளது.

நாம யுடியூபர்னு போட்டுட்டு பரோட்டா கடைகளின் பின்னால் சுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி எதாவது பண்ணி கல்லா கட்டலாம்ல?

~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments