Subscribe Us

கடந்த 72 மணித்தியாலங்களில் இலங்கையில் நடந்த சில சம்பவங்கள்…

 


ஏறாவூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை குப்பைதொட்டியிலிருந்து மீட்பு. 

 
தங்காலையில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - காதலனுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால் தற்கொலை செய்கிறோம் என கடிதம். 
 
(தூக்கிலிட்டுக்கொள்ளும் வீடியோவை சில மணி நேரங்களில் Shareகான்கள் அனுப்புவார்கள்.) 
 
கேகாலையில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவிக்கு அசிட் வீச்சு. காதலன் கைது. 
 
அம்பியுலன்ஸ் வண்டியில் மோதுன்டு 9வயது சிறுவன் மரணம். 
 
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் ஓட ஒட ஒருவரை வெட்டிக்கொலை. இரு குழுக்களிடையே நீண்ட நாள் பகை காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 
 
சில நாட்களுக்கு முன் ஹொரனை பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை 
 
செய்யப்பட்டார். கொலையாளி கைது. கொலைக்கான காரணம், திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருந்த பெண், யாருக்கு என கைகலப்பு வந்ததால் சுட்டுக்கொலை என கொலையாளி வாக்குமூலம். 
 
கொலை செய்யதவர்,கொலை செய்யப்பட்டவர் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆகியவர்கள். 
 
கலேவல பகுதியில் இரு இளம் காதல் ஜோடி தற்கொலை.
காதலனின் வயது - 17
காதலியின் வயது - 14 
 
தங்காலையில் தற்கொலை செய்கின்ற வீடியோவும்,ஏறாவூரில் குப்பைதொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் புகைப்படத்தையும் அலைபேசிக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதையும் விட மோசமான நாளாக இது இருந்து விட கூடாது. தப்பி தவறி கூட தற்கொலை செய்கின்ற வீடியோ, குழந்தை யின் புகைப்படத்தை பார்க்காதீர்கள். உடைந்தே போய் விட்டேன். போதும்டா ! 
 
கொலை,தற்கொலை,அசிட் வீச்சு,களவு,வீடு உடைப்பு,தங்க சங்கிலி/ கைப்பை பறிப்பு, ஒரு நாளைக்கு சர்வ சாதாரனமாக எத்தனை மோசமான செய்திகளை கடந்து போக வேண்டியிருக்கிறது
 
-azeem jahfer- 

Post a Comment

0 Comments