Subscribe Us

header ads

இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் விலகி தயவு செய்து வீட்டில் இருக்க முடியுமா? கடுமையாக சாடியுள்ள மஹேல ஜயவர்தன (Twiiter இணைப்பு)

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் நாடகம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  மறுபடியும் ராஜினாமா செய்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள மஹேல ஜயவர்தன,

“இது நகைச்சுவையா?. இந்த நியமனம் தற்போதைய நெருக்கடிக்குள் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம் போல், காலமும் பணமும் வீணானது. அவர் மீண்டும் ராஜினாமா செய்துள்ளார்.”

“ இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் விலகி தயவு செய்து வீட்டில் இருக்க முடியுமா? என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments