கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 75 வது விழாவை முன்னிட்டு மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று அழைத்து பழைய மாணவர்களை ஒன்றிணைக்க உறவுப் பாலமாக அமைந்த Aqsian Cricket Festival என்ற பழைய மாணவர் சங்கத்தின் வெற்றிகரமான நிகழ்வின் இறுதி நிகழ்வான பிரமாண்டமான பரிசளிப்பு விழா அல் அக்ஸா தேசிய பாடசாலை மர்ஹூம் தம்பி நெய்னா மரைக்கார் கேட்போர் கூடத்தில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் புடைசூழ மகிழ்ச்சிகரமாக நிறைவு பெற்றது.
இது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் தலைமையில் பாடசாலைக்கு புகழ் சேர்த்த க.பொ.த . சாதாரண தரம் மற்றும் உயர்தம்,தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களால் கெளரவிக்கப்பட்டதோடு AQSIAN CRICKET சுற்று போட்டியில் வெற்றி அணிகளுக்கு வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments