கத்தாருக்கு 3 நாள்கள் விஜயம் மேற்கொண்டிருந்த; 6 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டு விடுவிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் All Ceylon Makkal Congress தலைவர் Rishad Bathiudeen ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கும் கத்தாரில் இருக்கும் இலங்கை அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (20/2/2022) நடைப்பெற்றது.
இதிலே இலங்கையில் இருக்கும் தற்கால சூழ்நிலை குறித்தும், இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றியும், ஆரோக்கியமான அரசியல் நகர்வுகள் பற்றியும் பல விடயங்கள் பேசப்பட்டது. கத்தார் வாழ் இலங்கையர்கள் சார்பாக வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை பெற்றெடுக்க முயற்சிக்கும் படியும், மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களுக்கான முடிவுகளை எடுக்கும்படியும், அதிகாரத்தில் இல்லாத போதும் நாட்டின் கஷ்டத்தை போக்கிட உதவிகளை மத்தியகிழக்கில் இருந்து பெற்றுக்கொடுக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கத்தாருக்கு வரும் அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை, அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களை மற்றும் உயர் அதிகாரிகளை கத்தாரில் வாழும் இலங்கை சமூகத்தினர் சந்தித்து பேசும் செயற்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. வழமைபோல இந்த கலந்துரையாடலை தூய தேசத்திற்காக இயக்கம் Clean Nation ஏற்பாடு செய்ததோடு, அவ்வியக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் தலைமைதாங்கியது குறிப்பிடத்தக்கது.
දින 3 ක කටාර් සංචාරයක යෙදී සිටි ; මාස 6කට අධික කාලයක් සිරගතව සිට නිදහස්ව සිටින සමස්ත ලංකා මහජන කොංග්රසයේ නායක රිෂාඩ් බදියුදීන් සහ කටාර්හි ශ්රී ලංකා සංවිධාන නායකයින් අතර සුහද සාකච්ඡාවක් පසුගිය ඉරිදා (20/2/2022) පැවැත්විණි.
ශ්රී ලංකාවේ වත්මන් තත්ත්වය, ශ්රී ලාංකේය මුස්ලිම්වරුන්ගේ අනාගතය සහ සෞඛ්ය සම්පන්න දේශපාලන ක්රියාමාර්ග ගැන බොහෝ කතා බහට ලක්විය. කටාර්හි වෙසෙන ශ්රී ලාංකිකයන් වෙනුවෙන් විදේශගත ශ්රී ලාංකිකයන්ගෙන් ඔහු ඉල්ලා සිටියේ ඡන්දය ප්රකාශ කිරීමේ අයිතිය ලබා ගැනීමට උත්සාහ කරන ලෙසත්, ජනතාවගේ හැඟීම් තේරුම් ගෙන ජනතාව වෙනුවෙන් තීරණ ගැනීමටත්, මැදපෙරදිගින් සහය ලබා දෙන ලෙසත් ය.
කටාර් රාජ්යයට පැමිණෙන මැති ඇමතිවරුන්, දේශපාලන පක්ෂ නායකයින් සහ ජ්යෙෂ්ඨ නිලධාරීන් හමුවීමේ වැඩසටහනක් පදනම් කරගනිමින් මෙම සාකච්ඡාව සංවිධානය කරන ලදී. සුපුරුදු පරිදි පිවිතුරු ජාතියක් සඳහා වූ ව්යාපාරය විසින් සංවිධානය කරන ලද මෙම සාකච්ඡාව ඉෂාම් මරික්කාර් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
A friendly discussion took place last Sunday (20/2/2022) between All Ceylon People's Congress leader Rishad Bathiudeen, who was imprisoned for more than 6 months and released, and the leaders of Sri Lankan organizations in Qatar.
We talked about the current situation in Sri Lanka, the future of Sri Lankan Muslims and healthy political moves. We appealed to him one behalf of Overseas Sri Lankans to gain the right to vote, to make decision which understand the sentiments of the people and to seek assistance from the Middle East to alleviate the suffering of the country even when not in power.
0 Comments