Subscribe Us

கற்பிட்டியில் கிராமத்திற்கான ஒரு இலட்சம் வேலைத்திட்டம். (படங்கள் இணைப்பு)

 


நாடு முழுவதும் ஒரு இலட்சம் அபிவிருத்தி வேலை திட்டங்கள் இன்று 8.52 சுப நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுகளுக்கமைய கிராமத்திற்கான வேலை திட்டத்தின் கீழ் கல்பிட்டி மண்டலக்குடா கிராம சேவகர் பிரிவில் அல்பலாஹ் மீனவ சங்கம், மஸ்திதுல் ரஹ்மான் மற்றும் ஐயூப் அரசினர் பாடசாலை,சாந்த அந்தோனியார் மீனவர் சங்கம் மற்றும் அல் அக்ஸா தேசிய பாடசாலை போன்ற இடங்களுக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி மண்டலக்குடா கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகதர் ,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments