கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் Aqsian 1990 (O/L Batch) பழைய மாணவர் குழு ஏனைய மாணவ குழுக்களுக்கு எடுத்துக்காட்டாகவும் ஆர்வவமூட்டும் முகமாகவும்,அல் அக்ஸா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் அதிபர் ஆசிரியர்களின் மேற்பார்வையில் ,
அடுத்த மாதம் க.பொ.த(உயர்தரம்) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அரசறிவியல் மாணவர்களுக்கு பிரபலமான வளவாளரான M.F.M.ரியாஸ் (முகாமையாளர் ஆசிரியர் மத்திய நிலையம் புத்தளம்) ஆசியரால் மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்தும் முகமாக பரீட்சை வழிகாட்டல் செயலமர்வும், மற்றும் எதிர் வரும் வாரம் தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கல்பிட்ட்டியின் பிரபலமான புலமைப் பரீட்சை ஆசிரியரும் பிரதம பரீட்சகருமான சுப்ரமணியம் ஆசிரியரால் பரீட்சைக்குறிய வழிகாட்டல் செயலமர்வும்,மேலும் எதிர் வரும் 2023 ஆம் வருடம் தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு போன்ற மூன்று முக்கியமான நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் பொற்றோர்களின் நலன்கருதியும் ஒரே நாளில் சிறப்பான முறையில் நடாத்தி முடித்தது பாராட்டத்தக்கதே.
0 Comments