Subscribe Us

header ads

இரண்டு வாரங்களை தனிநபர்களாகவும் குடும்பங்களாகவும் சுய கட்டுப்பாட்டு தற்காப்பு வாரங்களாக பிரகடனம் செய்து கொள்வோம்!

 


ஐவேளையும் அதானுடன் வேளாவேளை தொழுது கொள்வோம், காலைமாலை திக்ருகளுடன் சந்தர்ப்ப துஆக்களையும் குல்சூராக்களையும் ஆயதுல் கவர்ச்சியையும் ஒதி அல்லாஹ்விடம் துஆவில் இருப்போம்!

வீடுகளில் தனிமைப்படுத்தல் ஆரம்ப கட்ட சிகிச்சைகள் மேற்கொள்தல் குறித்த சுகாதார வழிமுறைகளை அறிந்து கடைப்பிடிப்போம்!
தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது பொதுவான சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பேணுவதோடு முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை மேற்கொள்வோம்.
எல்லா நிலையிலும் தைரியமாகவும் அச்சம் பதட்டம் கவலைகளை தவிர்த்து அல்லாஹ்விடம் தவக்குள் வைத்து நம்பிக்கையுடன் மன அமைதியுடன் இருப்போம்!
வீடுகளில் அதிகம் இருப்பதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனதுகளை காயப்படுத்திக் கொள்ளாது வாய்களை பேணி பரஸ்பரம் ஒத்துழைப்புடன் இருந்து கொள்வோம்!
தினமும் போதிய உடற்பயிற்சிகளை வீட்டு வேலைகளை, வீட்டுத் தோட்ட சுறுறாடல் பராமரிப்புகளை செய்து சுவாச தொகுதியின் சிறப்பான செயற்பாட்டை உறுதி செய்வோம்.
வீட்டில் தொழில் செய்யுமிடங்களில் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்வோம்.
முடியுமானவரை சூரிய ஒளியில் இருப்போம்.
சாதாரண தடிமன் இருமல் வீஸிங் உள்ளவர்கள் இயன்றவரை அவற்றை குணப்படுத்திக் கொள்வோம்!
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பானங்கள் பழவகைகளை அறிந்து உட்கொள்வோம்.
முறையான ஆலோசனைகளோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுதேச மறுத்துவம் சொல்லித் தறும் கசாயங்களை பருகுவோம்.
நீராவி பிடிக்கின்ற முறையான வழிமுறைகளை அறிந்து சுவாசப் பாதைகளில் கிருமித் தொற்று சளி அடைப்புகளை நீக்கிக் கொள்வோம்!
கராம்பு கலந்த நீராவி அதனை மெல்லுதல் நோய்த் தொற்றை நீக்குவதாகவும், சுவாசப் பாதையை சீர் செய்து ஆக்சிஜன் மட்டத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஞ்சி கலந்த தேநீர் அவ்வப்போது அளவோடு சூடாக அருந்துவோம்!
குளிர்பானங்களை முற்றாக தவிர்ப்போம்!
பீ.சீ.ஆர் அன்டிஜன் செய்யும் தேவை உணர்ந்தால் உடனே செய்து கொள்வோம்!
நோய் அறிகுறி தென்படுகிறவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி தள்ளி நின்று முறையாக பராமரிப்போம்!
குடும்பத்தில் வசதி குறைந்தோர் தேவையுடையோர் அண்டை வீட்டார் நிலைமைகளை அறிந்து சதகா தானதர்மங்கள் மூலம் நன்மைகளை அல்லாஹ்வின் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்வோம்!
தற்காப்பு அங்கிகளை வைத்திருத்தல் அல்லது அவற்றை அவசரமாக பெறுவதற்கான கூட்டு ஏற்பாடுகளை செய்து வைத்திருத்தல் கட்டாயமாகும், அவற்றை மஸ்ஜிதுகளில் தயாராக வைத்திருப்போம்!
கொவிட் ஜனாசாக்களை எவ்வாறு கையாளுதல் என்பதனையும் அறிந்து வைத்திருப்போம்!
இதனை நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வோம்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
18.08.2021

Post a Comment

0 Comments