Subscribe Us

header ads

Club House எனும் பேசும் தளம் பற்றி தெரிந்து கொள்வோம்

 


சில நாட்களாய் இந்த Application சம்மந்தமான மீம்களும் போஸ்ட்களும் கண்களில் பட்ட வண்ணம் இருந்தது,

இருந்தும் என்னவென்று விரிவாய்ப் பார்க்கவில்லை நேற்று என்னதான்
இருக்கு என்டு பார்ப்போம் என்று திடீர் என அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து அக்கவுன்ட்டும் கிரியேட் பண்ணப்பட்டது,

அதாவது அக்கவுன்ட் பதிவு செய்யப்பட வேண்டுமாயின் நமது Contact இல் இருக்கும் யாராவது Club House எக்கவுன்ட் உள்ள ஒருவர் நம்மை கட்டாயம் அக்சப்ட் செய்ய வேண்டும்,

இருந்தும் முதல் தடவை அங்கே உள்ளே நுழையும் போது ஒன்றுமே விளங்காது கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலவே கொஞ்ச நேரத்திற்கு இருந்தது,

பின்பு நம் நண்பர்களையும் டவுண்லோட் செய்ய வைத்து அக்சப்ட் செய்து டெஸ்டிங்க் எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டோம்,

விடயம் என்னவெனில் குரூப் கோல் போன்ற ஒரு விடயமே இருந்தும் எக்கச்சக்கமானோர் இதில் இணைந்து கொள்ளலாம்,

எழுத்தாளர்கள்,நடிகர்கள்,Youtubers என பல பிரபலமானவர்களும் இணைந்துள்ளனர்,

ஒரு குரூப் (Room) உருவாக்கப்பட்டால் அது இணைந்துள்ளவர்களின் Follow List இல் உள்ளவர்கள் அவர்களின் Follow List இல்,

உள்ளவர்கள் என யாவருக்கும் காட்டும் அவர்களும் விரும்பினால் கலந்துரையாடலில் கதிரை போட்டு உட்கார்ந்து தம் கருத்துக்களைப் பேசலாம்,

இரவு நிறைய குரூப்களில் ஒவ்வொரு தலைப்புகள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன மாறி மாறி ஒவ்வொரு குரூப்பாய் சென்று பார்த்துக் கொண்டிருக்க ஒரு குரூப்பில்,

Speaker ஆக எட் செய்து என்ன தம்பி வந்து வந்து போரீங்க பேசுங்களன்? என நம்மையும் Speaker ஆக எட் செய்யப்பட்டு எல்லோரும் பேசிக் கொண்டே இருந்தோம்,

இடையில் லண்டனில் இருந்து ஒரு டொக்டர் அவுஸ்ட்ரேலியாவில் இருந்து ஒரு RJ என இணைந்து கல கலப்பாய் போனது குழுமம்,

சில பாடகர்களும் இருந்தமையால் பாட்டுப் பாட வைத்து பீட் பொக்சிங்க் செய்ய வைத்து பேஸ்புக் எக்கவுன்ட்கள் பரிமாறப்பட்டு குரூப் நிறைவுக்கு வந்தது,

இந்தியாவில் இருப்பவர்கள் நிறைய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துப் கொண்ட வண்ணமும் இருக்கிறார்கள்,

அங்கு பல Topics களில் பல குரூப்கள் உருவாக்கப்பட்டு ஆண் பெண்களால் பேசப்பட்டு அடி பொலியாய் நகர்கிறது,

மொத்தத்தில் தம் கருத்துக்களை முன் வைக்க நினைப்பவர்களுக்கு நல்லதொரு Platform இந்த Club House அப்ளிகேஷன்.

Post a Comment

0 Comments