Subscribe Us

கொரோனாவினால் வீழ்ந்த இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை UNP யால் மட்டுமே சரிபடுத்த முடியும் - RANIL அபி சரணாய்

கொரோனா வைரஸ் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
.
நாம் தற்போது பெரிய பிரச்சனையை எதிர்நோக்க நேரிடும். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சி பாதைக்குள் கொண்டு செல்வதா அல்லது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாது கொரோனாவை பரவ விடுவதா என்பதே அந்த பிரச்சினை.

அரசாங்கத்தினால் எப்படி இதனை கட்டுப்படுத்த முடியாது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை கட்டியெழுப்பதற்காக வழிகள் அரசாங்கத்திடம் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments