Subscribe Us

Doctors Fight : வைத்தியசாலையில் இரு டாக்டர்களின் மோதல் உக்கிரம் - வைத்திய உபகரணங்களும் சேதம்

  (பாறுக் ஷிஹான்)


இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இரு வைத்தியர்களும்  இரு வேறு வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (7) காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று பணி நிமித்தம் இரு வைத்தியர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்திருந்த நிலையில்,  கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

இரு வைத்தியர்களின் மோதலினால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன. இதனையடுத்து  அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்  

காயமடைந்த ஒரு வைத்தியர்  நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலும்  மற்றைய டாக்டர்   அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையிலும்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments