Subscribe Us

header ads

Dubai Metro : துபாய் மெட்ரோவின் விதி மீறல்கள் மற்றும் அபராதங்களின் முழு பட்டியல்.!


துபாய் மெட்ரோ போக்குவரத்தின் அனைத்து விதி மீறல்கள் மற்றும் அபராதங்களின் பட்டியல் பின்வருமாறு:

100 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. பொது போக்குவரத்து சேவைகள் அல்லது பொது போக்குவரத்து வாகனங்களின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைதல்.
  2. பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சேவைகளில் பயணிகளுக்காக நியமிக்கப்படாத இடங்களில் பயணிகள் நிற்பது அல்லது அமருவது.
  3. உங்கள் கால்களை இருக்கைகளில் வைப்பது.
  4. மற்ற பயணிகளுக்கு சிரமம், அசௌகரியம் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுவது.
  5. குறிப்பிட்ட சில வகை பயணிகளுக்கென ஒதுக்கப்பட்ட கேபின்களில் அல்லது இருக்கைகளில் அனுமதியின்றி அமருவது.
  6. அனுமதிக்கப்படாத இடங்களில் சாப்பிடுவது மற்றும் குடிப்பது.
  7. பார்வையற்ற பயணிகளுக்கான வழிகாட்டி நாய்களைத் தவிர, எந்தவொரு பொது போக்குவரத்து வாகனங்கள் அல்லது சேவைகளில் விலங்குகளை கொண்டு வருதல்.
  8. தவறான முறையில் லிப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துதல்.
  9. பொது போக்குவரத்து வாகனங்கள் அல்லது சேவைகளில் தாவி அல்லது குதித்து ஏறுதல்.
  10. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனமும் நகர்ந்து கொண்டிருக்கையில் அதன் கதவை அணுகவோ அல்லது திறக்கவோ மற்றும் அதிலிருந்து வெளியேறிச் செல்லவோ முயற்சிப்பது.
  11. பிற பயணிகளுக்கு இடையூறு அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது உபகரணங்களை எடுத்துச் செல்வது அல்லது பயன்படுத்துவது.

200 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. கட்டணம் செலுத்தாமல் பொது போக்குவரத்துக்கு சேவைகளில் நுழைதல் மற்றும் வெளியாகுதல்.
  2. அதிகாரியின் கோரிக்கையையும் மீறி NOL கார்டை சமர்ப்பிக்க தவறுதல்.
  3. வேறொருவருக்கு சொந்தமான பயண அட்டைகளைப் பயன்படுத்துதல்.
  4. காலாவதியான NOL கார்டைப் பயன்படுத்துதல்.
  5. தவறான (INVALID) NOL கார்டைப் பயன்படுத்துதல்.
  6. RTA-வின் அனுமதியின்றி ஒரு NOL கார்டை விற்பனை செய்வது.
  7. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனம் அல்லது சேவைகளுக்குள் விளம்பரம் மூலம் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது ஏதேனும் பொருட்களுக்கு விளம்பரப்படுத்துதல்.
  8. RTA-வின் இன்ஸ்பெக்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் அறிவுறுத்தல்களை மதிக்க தவறுதல்.
  9. சைன்போர்டுகளில் குறிப்பிடப்பட்ட RTA-வின் அறிவுறுத்தலுக்கு மாறாக பொது போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல்.
  10. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனம் அல்லது சேவைகளுக்கு அசுத்தம் விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல் அல்லது கறைகளை ஏற்படுத்துதல்.
  11. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனம் அல்லது சேவைகளுக்குள்ளே புகை பிடிப்பது.
  12. பொது போக்குவரத்து சேவை மற்றும் வாகனங்களின் ஓட்டுநருக்கு ஏதேனும் கவனச்சிதறல் அல்லது தடங்கல் ஏற்படுத்துவது.

300 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. தூங்குவதற்கு தடைசெய்யப்பட்ட பயணிகள் தங்குமிடத்தில் தூங்குவது.

500 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. போலியான பயண அட்டையை பயன்படுத்துவது.
  2. பொது போக்குவரத்து சேவைகள் அல்லது வாகனங்கள் உள்ளே மது பானங்களை எடுத்துச்செல்வது.

1000 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. எந்த ஒரு பொது போக்குவரத்து சேவைகள் அல்லது வாகனங்கள் உள்ளே ஆயுதங்கள், எரியக்கூடிய அல்லது அபாயகரமான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வது.

2000 திர்ஹம்ஸ் அபராதம்:

  1. பொது போக்குவரத்து சேவைகள் அல்லது வாகனங்களின் உபகரணங்கள் அல்லது இருக்கைகளை சேதப்படுத்துதல் அல்லது அழித்தல்.
  2. தேவையற்ற சமயங்களில் பாதுகாப்பு கருவிகள் அல்லது சாதனங்களை பயன்படுத்துதல். அவசர வெளியேற்றங்கள் (EMERGENCY EXITS) உட்பட.

ஒரு நாளைக்கு 100 திர்ஹம்ஸ் முதல் 1000 திர்ஹம்ஸ் வரை அபராதம்:

  1. அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் அதிக நாட்கள் மெட்ரோ பயணிகளுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல்.

குறிப்பு: இனி வரும் காலங்களில், துபாய் மெட்ரோ போக்குவரத்தில் ஏதேனும் புதிதாக நடைமுறைக்கு வரும் விதி மீறல்கள் மற்றும் அபராதங்களையும் இதே பதிவில் சேர்ப்போம். இதன் மூலம் துபாய் மெட்ரோ போக்குவரத்தின் அனைத்து விதி மீறல்கள் மற்றும் அபராதங்களை இதே பதிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த பதிவில் மேலே குறிப்பிட்ட துபாய் மெட்ரோ போக்குவரத்தின் அனைத்து விதி மீறல்கள் மற்றும் அபராதங்களும் அதிகாரபூர்வ துபாய் RTA இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை.

துபாய் RTA இணையதளத்தில் ஆங்கிலத்தில் இருந்த தகவல்களை உங்களுக்கு எளிதில் புரியவைப்பதர்காகவே தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.

Post a Comment

0 Comments